உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரே போட்டியில் 5 வீரரர்கள் அரை சதம் அடித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் நெதர்லாந்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் பல புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர். தனித்தனியாக வீரர்கள் ரன்குவிப்பில் ஈடுபட்டாலும், அதுவும் ஒரு சாதனையாக மாறியுள்ளது. இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் சுப்மன் கில் 51 ரன்னும், கேப்டன் ரோகித் ஷர்மா 61 ரன்னும், கோலி 51 ரன்னும், ஸ்ரேயாஸ் ஐயர் 128 ரன்னும், கேஎல் ராகுல் 102 ரன்னும் எடுத்தனர்.
இதன் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியில் 5 அரைசதம் அடித்த ஒரே அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 1975 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் 4 பேர் அரைசதத்தை கடந்திருந்ததே சாதனையாக இருந்தது. 1987ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய வீரர்கள் சுனில் கவாஸ்கர், முகமது அசாருதீன், நவோஜித் சிங் சித்து, திலிப் வெங்சர்கார் ஆகியோர் 50 ரன்களை கடந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று உலக கருணை தினம்... வெறுப்பு கரையட்டும்; கருணை பொங்கட்டும்!
ஈரோட்டில் அதிர்ச்சி! அதிகாலையில் கோர விபத்து... 3 பேர் உயிரிழப்பு!