[X] Close

நமக்கு ஏன் வம்பு?- ட்விட்டர் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய சானியா


sania-mirza-quits-social-media

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Sep, 2018 10:26 am
  • அ+ அ-

கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவிக்கும் பல்வேறு சர்ச்சைக் கருத்துகளைத் தவிர்க்கும் வகையில் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இருந்து தற்காலிகமாக வெளியேறினார் சானியா மிர்சா.

ஆசியக் கோப்பைப் கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நீண்ட இடைவெளிக்குப் பின் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கைத் திருமணம் செய்துள்ளார். பாகிஸ்தான் வீரரைத் திருமணம் செய்துள்ளதால் அவ்வப்போது ட்விட்டரில் சானியா மிர்சாவை நெட்டிசன்கள் வம்புக்கு இழுப்பது போன்ற கருத்துகளைப் பதிவிடுவார்கள்.

இதனால், சர்ச்சைக் கருத்துகளைத் தவிர்க்கும் வகையில் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இருந்து தற்காலிகமாக வெளியேறினார் சானியா மிர்சா.

இது தொடர்பாக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ட்விட்டரில் நேற்று மாலை பதிவிட்ட கருத்தில், ''இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்க இன்னும் 24 மணிநேரமே இருக்கிறது. இந்தச் சூழலில் பல்வேறு சர்ச்சையான கருத்துகளில் இருந்து தப்பிக்க நான் இப்போதே பாதுகாப்பாக ட்விட்டரில் இருந்து வெளியேறி விடுகிறேன். அடுத்த சில நாட்களுக்கு சமூக ஊடகங்கள் பக்கம் வரமாட்டேன். கிரிக்கெட் போட்டி தொடர்பாக பல்வேறு முட்டாள்தனமான கருத்துகளை பலர் தெரிவிப்பார்கள். அதைத் தவிர்க்க வேண்டும். இந்தக் கருத்துகளால் சாதாரண நிலையில் இருப்பவர்களே உடல்நலம் குன்றிவிடுவார்கள். ஆனால், நானோ கர்ப்பமாக இருக்கிறேன். ஆதலால், விடைபெறுகிறேன். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி வெறும் கிரிக்கெட் போட்டி விளையாட்டுதான். மறந்துவிடாதீர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close