சர்பராஸ்கானுக்கு பெரிய சவால் காத்திருக்கிறது... சஸ்பென்ஸ் வைக்கும் கங்குலி!


சர்பராஸ்கான்

"உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் இந்திய அணியில் இடம்பெறலாம் என்பதற்கு சர்பராஸ்கான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு" என்று முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி பாராட்டியுள்ளார்.

தொப்பியை முத்தமிட்ட சர்பராஸ்கான் தந்தை

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய அணியில் சர்பராஸ்கான் அறிமுகமானார். போட்டி தொடங்குவதற்கு முன்பாக அனில் கும்ப்ளேவிடம் இருந்து தொப்பியை, தனது தந்தையிடம் அளித்தார். அப்போது கட்டி அணைத்து அவரது தந்தை அழுத காட்சி, சமூகவலைதளங்களில் வைரலானது. ரஞ்சிப் போட்டிகளில் கடந்த 7 ஆண்டுகள் சிறப்பாக விளையாடி, தற்போது இந்திய அணியில் சர்பராஸ்கான் இடம்பிடித்துள்ளார்.

அந்தப் போட்டியில், எந்த பதற்றமின்றி நிதானமாக ஆடி 48 பந்துகளில் 50 ரன்கள் அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அப்போட்டியில் சிறப்பாக விளையாடி 62 ரன்களில் அவுட்டானார். அவரது இந்த அறிமுக ஆட்டத்தை, மூத்த கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி, சர்பராஸ்கானை பாராட்டியுள்ளார்.

சவுரவ் கங்குலி

"இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சர்பராஸ்கான், சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளார். அவருக்கு நேர்மறையான பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து போராடினால் இந்தியாவுக்காக விளையாடலாம் என்பதற்கு சர்பராஸ்கான் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். ஆனால், அவர் வெளிநாட்டு மைதானங்களில் ரன்கள் குவிக்க வேண்டும். அதுவே அவருக்கு தற்போது இருக்கும் மிகப்பெரிய சவால். இந்திய துணைக் கண்டத்திற்கு வெளியே தன்னுடையே திறமையை நிரூபிக்க வேண்டும்" என்று கங்குலி அறிவுறுத்தியுள்ளார்.


இதையும் வாசிக்கலாமே...


பணிகள் நிறைவு... கருணாநிதி நினைவிடத்தை 26-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்!

x