[X] Close

ஹாங்காங் கிரிக்கெட் வீரர்களை சந்தித்து, உற்சாகப்படுத்திய இந்திய வீரர்கள்


indian-players-in-hongkong-dressing-room

ஹாங்காங் வீரர் எஹ்சானுடன் ரோஹித் சர்மா, தோனி

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 19 Sep, 2018 16:50 pm
  • அ+ அ-

இந்திய அணியினர் ஹாங்காங்க் அணி வீரர்களை, அவர்களின் ட்ரெஸ்ஸிங் அறைக்குச் சென்று, சந்தித்துப் பேசி, உற்சாகப்படுத்தியுள்ளனர்.

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்கொண்டது.முதலில் ஆடிய இந்திய அணி 285 ரன்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஹாங்காங் அணி மிகச் சிறப்பாக ஆடி விக்கெட் இழப்பின்றி நிதானமான ரன் சேர்ப்பில் ஈடுபட்டது. 

34 ஓவர்கள் வரை அந்த அணியின் ஒரு விக்கெட்டைக் கூட இந்தியாவால் வீழ்த்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிலையில் ஹாங்காங் அணிக்கு தேவைப்பட்டது 96 பந்துகளில் 112 ரன்கள் மட்டுமே. துவக்க வீரர்கள் இருவருமே அரை சதம் கடந்து நிலையாக ஆடிக் கொண்டிருந்தனர்.

 35-வது ஓவருக்குப் பிறகே தொடர்ந்து விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. 50 ஓவர்கள் முடிவில் 259 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளுடன், வெறும் 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் தோற்றது. 

தோற்றாலும், சர்வதேச அளவில் முன்னணி அணிகளில் ஒன்றான இந்தியாவிற்கு தோல்வி பயம் காட்டிய ஹாங்காங் அணியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய வீரர்களும் ஹாங்காங் அணியினரைப் பாராட்டியுள்ளனர்.

ஆட்டம் முடிந்த பிறகு ஹாங்காங் அணியின் அறைக்கு சென்ற தோனி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட வீரர்கள், அந்த அணியினருடன் கலந்துரையாடி, அனுபவ அறிவைப் பகிர்ந்து கொண்டு, புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.

இதில் எஹ்சான் என்ற வீரர், 10 வருடங்களாக இந்தத் தருணத்துக்காக காத்திருந்தந்தாகவும். இது தனது அணிக்கு, கனவு நிஜமானதைப் போன்ற தருணம் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ஹாங்காங் அணி சிறப்பாக விளையாடியதாகவும், அவர்களிடம் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து உற்சாகப்படுத்தினோம் என்றும் இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் குறிப்பிட்டார். 

சர்வதேச அரங்கில் அனுபவமில்லாத, வளர்ந்து வரும் இளம் அணியினரை இந்திய வீரர்கள் தாமாக சென்று சந்தித்துப் பேசி உற்காசப்படுத்திய செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close