[X] Close

யுவராஜ் சிங் வாழ்வில் மறக்க முடியாத நாள் செப்.19: ஏன் தெரியுமா? - வீடியோ இணைப்புடன் 


yuvaraj-singh-will-never-forget-this-day

  • kamadenu
  • Posted: 19 Sep, 2018 16:15 pm
  • அ+ அ-

இந்திய அணியின் இடதுகை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங், ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர். 18 ஆண்டுகளாக பல்வேறு மேட்ச்களில் தனது சிறப்பான பங்களிப்புகளை அளித்திருக்கிறார். அதில், மறக்க முடியா நாள் செப்டம்பர் 19, 2007. ஏன் தெரியுமா? ஒரு சிறிய பிளாஷ்பேக்.

கடந்த 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் செப்டம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் வீரேந்திர சேவாக் (68), கம்பீர்(58) ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துச் சென்றனர். அடுத்து வந்த யுவராஜ் சிங் தோனி, கூட்டணி அதிரடியாக ரன்களைச் சேர்த்தனர்.

அப்போட்டியில் 19-வது ஓவரை இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசினார். இந்த ஓவரில் யுவராஜ் சிங் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்கள் விளாசி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார்.

12 பந்துகளில் அரைசதம் அடித்து மிகவிரைவாக அரை சதம் அடித்தவீரர் என்ற சாதனையையும் யுவராஜ் சிங் படைத்தார். டி20 கிரிக்கெட்டில் 6 பந்துகளில் தொடர்ந்து 6 சிக்ஸர்கள் அடித்த நிகழ்வு முதல்முறையாக நிகழ்ந்தது.


இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள்சேர்த்தது. 219 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது.

யுவராஜ் சிங் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் அடித்தது சர்வதேச அளவில் நிகழ்த்தப்பட்ட 2வது சாதனையாகும். இதற்கு முன், கடந்த 1968-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி நாட்டிங்ஹாம்ஷையர் மற்றும் கிளாமோர்கன் அணிகளுக்குஇடையே நடந்த போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கேரி சோபர்ஸ் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.

இரண்டாவதாக, இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடந்த 1985-ம் ஆண்டு, ஜனவரி 10-ம் தேதி பரோடா அணிக்கு எதிரான உள்நாட்டுப் போட்டியில் 6 சிக்ஸர்கள் விளாசி இருந்தார்.

ஒருநாள்போட்டிகளைப் பொருத்தவரை தென் ஆப்பிரிக்க வீரர் ஹெர்சல் கிப்ஸ் கடந்த 2007-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியின் போது நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனையைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close