உலகக் கோப்பை தொடரில் இந்தியா தோற்றால் பரிசு தருவேன்: இங்கிலாந்து முன்னாள் வீரர் பேட்டியால் பரபரப்பு!


மைக்கேல் வான்

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தோற்றால், வாசிம் ஜாபருக்கு வழங்க பரிசு ஒன்றை வாங்கியுள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

வாசிம் ஜாபர்

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடியவர் வாசிம் ஜாபர். இவர் 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்களையும், 11 அரை சதங்களையும் அடித்தவர். மிகவும் மெதுவாக விளையாடக்கூடிய வீரர் என்ற பெயர் பெற்றவர் வாசிம் ஜாபர். இவருக்கும், முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வானுக்கும் இடையே சமூக வலைதளத்தில் நீண்டே போரே நடைபெற்று வருகிறது. இவரும் ஒருவரை, ஒருவர் கலாய்த்துக்கொள்வது வாடிக்கையான ஒன்று.

இந்நிலையில், இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து தொடர் தோல்விகளைச் சந்தித்த நிலையில், வாசிம் ஜாபர் மைக்கேல் வானை வழக்கம் போல சீண்டினார். பதிலுக்கு வான் பல்வேறு பதிலடிகளைக் கொடுத்து வந்தார். இந்நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் கில்கிறிஸ்ட், மார்டின் ஆகியோருடன் இணையம் வாயிலாக மைக்கேன் வான் கலந்துரையாடினார்.

அப்போது, அவர் ஜாபரை சீண்டும் விதமாக இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரில் தோல்வியடைந்தால், அவருக்காக பரிசு ஒன்றை வாங்கி வைத்திருப்பதாகவும் கூறினார். மேலும், ஆஸ்திரேலிய அணியால் மட்டுமே இந்தியாவை வீழ்த்த முடியும் என்றும் வான் தெரிவித்துள்ளார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணியை 7விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்! முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!

x