[X] Close

நீண்ட நாள் நினைவில் நிற்கும் டெஸ்ட் போட்டி: விவிஎஸ் லக்‌ஷமண்


vvs-laxman-about-oval-test

கோப்புப் படம்: விவி சுப்பிரமணியம்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 12 Sep, 2018 12:55 pm
  • அ+ அ-

இந்தியா - இங்கிலாந்து இடையே செவ்வாய்க்கிழமை ஓவலில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டி, நீண்ட நாட்கள் நினைவில் நிற்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்‌ஷமண் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டி20, ஒருநாள், டெஸ்ட் என அடுத்தடுத்து விளையாடியது. இதில் டி20 தொடரை மட்டுமே இந்திய அணி வென்றது. ஒருநாள் தொடரையும், டெஸ்ட் தொடரையும் இங்கிலாந்து அணி வென்றது.

ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி வென்றிருந்தாலும், ஓவல் டெஸ்ட் போட்டியும் முக்கியமான போட்டியாக அமைந்தது. அந்த அணியின் வீரர் அலஸ்டைர் குக் இந்த போட்டியுடன் ஓய்வு அறிவித்திருந்தார். ஜிம்மி ஆண்டர்சனும் முக்கியமான மைல்கல் சாதனையை எட்டும் முனைப்பில் இருந்தார். நடந்த முடிந்த இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்திய அணியை பொருத்த வரை ராகுல் மற்றும் ரிஷப் பந்தின் ஆட்டம் எதிர்பாராத வகையில் ஆட்டத்தின் போக்கை மாற்றி இந்தியாவுக்கு வெற்றி பெறும் நம்பிக்கையை அளித்தது.

இந்த டெஸ்ட் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்‌ஷமண், "விட்டுவிடக்கூடாது என்கிற கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்தின் அணுகுமுறையை மெச்சுகிறேன். இருவரும் மறக்கமுடியாத சதங்களை எடுத்துள்ளார்கள். அலஸ்டைர் குக் தனது கடைசி டெஸ்டில் சதமெடுத்தது, பந்த் தனது முதல் சதத்தை எடுத்தது, ராகுலின் அருமையான 149 ரன்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவராக ஜிம்மி ஆண்டர்சன் ஆனது என  நீண்ட நாட்கள் நினைவில் நிற்கும் பல தருணங்கள் நிறைந்த டெஸ்ட் போட்டி இது. வெற்றி பெற்ற இங்கிலாந்துக்கு வாழ்த்துகள்" என்று வாழ்த்திப் பேசியுள்ளார்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close