[X] Close

ரிஷப் பந்த் ஒரு சுவாரசியமான இளைஞர்: சேவாக் பாராட்டு


sehwag-lauds-pant

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 12 Sep, 2018 12:41 pm
  • அ+ அ-

சிக்ஸருடன் சதத்தை எட்டிய இந்திய வீரர் ரிஷப் பந்த் ஒரு சுவாரசியமான இளைஞர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்து டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில், கடைசி நாளான நேற்று, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சதமடித்தார். கே.எல்.ராகுலும் 149 ரன்கள் சேர்த்தார். இந்த இருவரின் பார்ட்னர்ஷிப்பும் இங்கிலாந்து அணியை சற்று பதட்டமடையச் செய்தது. இந்திய அணி தோல்வியுற்றாலும் இவர்கள் இருவரது ஆட்டமும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்திய அணியில் அதிரடி ஆட்டத்துக்கு புகழ்பெற்ற வீரேந்திர சேவாக் இவர்கள் ஆட்டத்தைப் பற்றி கூறுகையில், "டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ரன் கணக்கை சிக்ஸருடன் ஆரம்பித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தை சிக்ஸர் அடித்து எட்டியுள்ளார். ரிஷப் பந்த் ஒரு சுவாரசியமான இளைஞர். கே.எல்.ராகுலின் ஆட்டமும் திறமிக்கதாக இருந்தது. கடினமான தொடரில் இவர்கள் நம்பிக்கை தந்துள்ளார்கள். 4-1 என தொடரை வென்ற இங்கிலாந்து அணிக்கு பாராட்டுகள்.

இந்தியா அங்கங்கு சிறப்பாக இருந்தாலும் பேட்டிங்கில் சீராக இல்லை. கடைசி நாளில் பந்த் மற்றும் ராகுல் ஆட்டம் மன நிறைவாக இருந்தது. அதே போலதான் தொடர் முழுவதும் கோலி மற்றும் பவுலர்களின் சீரான (நல்ல) ஆட்டமும். வெளிநாடுகளில் சிறப்பாக விளையாட இன்னும் உழைக்க வேண்டும். ஆஸ்திரேலிய தொடருக்கு என் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close