[X] Close
 

ராகுல் - பந்த் பார்ட்னர்ஷிப், அற்புதமான தருணம்: சச்சின் புகழாரம்


sachin-lauds-rahul-pant-partnership

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 12 Sep, 2018 12:24 pm
  • அ+ அ-

கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்து பார்ட்னர்ஷிப் ஆட்டம் இந்தத் தொடரின் அற்புதமான தருணங்களில் ஒன்று என சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று நடந்து முடிந்தது. இதில் இந்தியா தோல்வியடைந்தது. ஆனால் கே.எல்.ராகுல் ரிஷப் பந்த் இணை 204 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தது. இருவருமே சதம் அடித்தனர். இவர்கள் ஆடியதை பார்த்தபோது ஒரு கட்டத்தில் இந்திய அணி வென்று விடும் என்றே தோன்றியது. ராகுல் 149 ரன்களுக்கும், பந்த் 114 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இவர்கள் இருவரது ஆட்டத்தையும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டிப் பேசியுள்ளனர். அந்த வரிசையில் சச்சின் டெண்டுல்கரும் இவர்கள் ஆட்டம் குறித்து புகழாரம் சூட்டியுள்ளார்.

"கட்டுப்பாடுடன் ஆக்ரோஷமான ஆட்டத்தை எப்படி ஆடுவது என கே.எல்.ராகுலும், ரிஷப் பந்தும் அருமையாக காட்டியுள்ளார்கள். இந்த டெஸ்ட் தொடர் தந்த பல அற்புதமான தருணங்களில், இவர்களின் பார்ட்னர்ஷிப்பும் ஒன்று" என்று சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரிஷப் பந்த் ஏன் ஆசிய கோப்பைக்கான இந்திய ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை. அவரது ஆட்டத்தின் தன்மை ஒருநாள் போட்டிக்கு ஏதுவான ஒன்று என்று ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.

 

[X] Close