[X] Close

இந்தியா சிறப்பாக ஆடவில்லை: ஹர்ஷா போக்லே கருத்து


harsha-bhogle-on-ind-defeat

ஹர்ஷா போக்லே

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 12 Sep, 2018 12:04 pm
  • அ+ அ-

நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரில், இந்திய அணி தேவையான அளவு சிறப்பாக ஆடவில்லை என கிரிக்கெட் விமர்சகரும் வர்ணனையாளருமான ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. இது குறித்து ஹர்ஷா போக்லே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"ஒரு வேளை இப்படி ஆகியிருந்தால் என்ற பேச்சுக்கெல்லாம் விளையாட்டில் இடமில்லை. இந்தியாவுக்கான தருணங்கள் இருந்தன. ஆனால் முடிவில் 4-1 என்பதுதான் கணக்கு. இந்தியா தேவையான அளவு சிறப்பாக விளையாடவில்லை. வெளிநாட்டு மண்ணில் தொடர்ந்து இரண்டாவது ஏமாற்றம் இது.

கோலி சிறப்பாக ஆடினார், வேகப்பந்து வீச்சாளர்கள் அற்புதமாக வீசினர். ஆனால் தொடர்ந்து நல்ல ஆட்டங்களை தரமுடியாத அளவு பேட்டிங்கில் நிறைய ஓட்டைகள் இருந்தன. தொடரின் கடைசி நாள் அற்புதமானதாக இருந்தது. பல்வேறு தருணங்கள் நம்மை ஈர்த்தன. இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லது" என்று போக்லே கூறியுள்ளார்.

கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் சதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள போக்லே, "தைரியமான, துணிச்சலான ஷாட்டுகள் நிறைந்த அட்டகாசமான சதத்தை கே.எல்.ராகுல் அடித்துள்ளார். ஒருவேளை எதிர்காலத்தில் அவருக்கு இந்த பாணிதான் சரியாக இருக்கும் போல. அவரை வீழ்த்த ராட்சஸத்தனமான ஒரு பந்து தேவைப்பட்டது. ரிஷப் பந்துக்கு இந்த சதம் எதிர்காலத்துக்கான நம்பிக்கையை தரும்" என்று கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close