விராட் கோலிக்காக பெங்களூரு அணியின் எக்ஸ் பக்கத்தில் வெளியான பதிவு ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளவர் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு அணியில் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் கோலியை, ரசிகர்கள் கிங் கோலி என அழைத்து வருகின்றனர். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இவர் படைத்துள்ள சாதனைகள் ஏராளம்.
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது சச்சினின் சாதனையை சமன் செய்து, 50வது சதத்தையும் கடந்தார். கடைசியாக அவர், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடினார். இந்த சூழலில் இங்கிலாந்திற்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் அவர் விலகியிருந்தார்.
இந்நிலையில், இன்று இங்கிலாந்திற்கு எதிரான மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் விராட் கோலியின் பெயர் இடம்பெறவில்லை. மேலும், விராட் கோலி தனிப்பட்ட காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்திருந்த நிலையில், அணியில் அவர் சேர்க்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. அவர் அணியில் இணையாததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இதுவரை எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த சூழலில், பெங்களூரு அணி நிர்வாகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “கடந்த 13 ஆண்டுகளில் விராட் கோலி இல்லாத முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இது. மேலும், இந்த தேசம் உங்களுடன் இருக்கிறது. நீங்கள் திரும்ப வரும் வரை, உங்களுக்கான இடம் அப்படியே இருக்கும் கிங்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் விராட் கோலி குறித்து எதுவும் கூறப்படாத நிலையில், தற்போது அவருக்கு என்னதான் ஆச்சு என ரசிகர்கள் குழப்பத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!
ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!
ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!
அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!