மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டி தொடர் 1-0 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி ஒயிட்வாஷ் செய்தது.
இதையடுத்து முதல் டி20 போட்டி ஹோபர்ட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் மற்றும் ஜோஸ் இங்கிலிஸ் ஆகியோர் சிறப்பான துவக்கம் அளித்தனர். குறிப்பாக 100வது போட்டியில் களமிறங்கிய டேவிட் வார்னர் 36 பந்துகளில் ஒரு சிக்சர், 14 பவுண்டரிகள் உட்பட 72 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.
இதன் பிறகு வந்த வீரர்களில் டிம் டேவிட் மட்டும் 37 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஆண்ட்ரே ரசல் 3 விக்கெட்டுகளையும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிராண்டன் கிங் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் சிறப்பான துவக்கம் அளித்தனர். இருப்பினும் பிராண்டன் 53 ரன்களிலும், ஜான்சன் 42 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
9வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 34 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருந்தபோதும் 20 அவர் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 22 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் சாம்பா 3 விக்கெட்டுகளையும், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலமாக டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!