[X] Close

கிரிக்கெட்டில் இப்படி ஒன்றை கேள்விப்பட்டு இருக்கீங்களா?-: பீல்டரின் வேடிக்கையான செயலுக்கு 5 ரன்கள் தண்டனை விதித்த நடுவர்


5-runs-punishment-for-fielder

  • kamadenu
  • Posted: 10 Mar, 2018 16:13 pm
  • அ+ அ-

காபா,

சர்வதேச கிரிக்கெட்  போட்டிகளில் எத்தனையோ விதிமுறைகளை கேள்விப்பட்டு இருக்கிறோம். விக்கெட் கீப்பர் அணியும் ஹெல்மட்டில் பந்துபட்டால் அதற்கு தனியாக ரன் கொடுக்கும் விதிமுறை கூட அறிந்திருப்போம். ஆனால், இந்த போட்டியில் பந்துவீச்சாளருக்கு கிடைத்த தண்டனையை இதற்கு முன் பெரும்பாலானோர் கேள்விப்பட்டு இருக்கமாட்டோம்.

ஆஸ்திரேலியாவின் காபா நகரில் குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உள்நாட்டு கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியில் குயின்ஸ்லாந்து அணி பந்துவீசியது. அப்போது குயின்ஸ்லாந்து பந்துவீச்சாளர் வீசிய ஓவரில், மேற்கு ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்  ஸ்குயர் லெக் திசையில் அடித்துவிட்டு ரன் ஓடினார்.

அப்போது விக்கெட் கீப்பராக இருந்த, ஜிம்மி பியர்சன் தன்னுடைய ஒரு கிளவுசை கழற்றி ஸ்டெம்புக்கு அருகே வீசிவிட்டு, பந்தை பீல்டிங் செய்ய ஓடினார். பந்தை தடுத்த விக்கெட் கீப்பர் பியர்சன் அதை எடுத்து ஸ்டெம்பை நோக்கி எறிந்தார்.

அப்போது, ஸ்டெம்புக்கு அருகே நின்று இருந்த குயின்ஸ்லாந்து வீரர் மாத்யூ ரென்ஷா விக்கெட் கீப்பர் கழற்றி வீசி இருந்த ஒரு கிளவுசை ஒரு கையில் போட்டுக்கொண்டு பந்தைப் பிடித்தார். அதன்பின் அந்த கிளவுசை விக்கெட் கீப்பர் பியர்சனிடம் ரென்ஷா திருப்பிக் கொடுத்தார்.

இதைப் பார்த்த நடுவர்கள் இருவரும் ரென்ஷாவை அழைத்து ஐசிசி விதிமுறைகள் 27.1 ன்படி, விக்கெட் கீப்பரின் கிளவுசை அவரைத் தவிர வேறு எந்த வீரரும் அணிந்து பீல்டிங் செய்யக்கூடாது என்பது விதிமுறையாகும். அந்த விதிமுறையை நீங்கள் மீறிவிட்டீர்கள். ஆதலால், உங்களுக்கு 5 ரன்கள் தண்டனை விதிக்கப்படுகிறது. அதாவது, எதிரணிக்கு கூடுதலாக 5 ரன்கள் தரப்படுகிறது எனத் தெரிவித்தனர்

இதைக் கேட்ட மாத்யூ ரென்ஷா எனக்கு இந்த விதிமுறைகள் புதிதாக இருக்கிறது, நான் நின்ற இடத்துக்கு அருகே கிளவுஸ் இருந்ததால், அதை எடுத்து கையில் மாட்டிக்கொண்டேன்  என்று தெரிவித்தார். ஆனால், நடுவர் மறுப்பு தெரிவித்து எதிரணிக்கு கூடுதலாக 5 ரன்கள் வழங்கினார்.

இது குறித்து இணையதளம் ஒன்றுக்கு மாத்யூ ரென்ஷா அளித்த பேட்டியில் “ கிரிக்கெட்டில் இப்படியெல்லாம் விதிமுறை இருக்கிறதா என்று எனக்கு தெரியாது. விளையாட்டுக்காக கீப்பிங் கிளவுஸ் போட்டுபந்தை பிடிக்கலாம் என்று நினைத்து பிடித்தேன். ஆனால், நடுவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துவந்து, விதிமுறைகளா மீறிவிட்டதாகக் கூறி எனக்கு 5 ரன்கள் அபராதம் விதித்துள்ளனர். நான் தெரியாமல் செய்ததற்கு இப்படி ஒரு தண்டனை” எனத் தெரிவித்தார். 

இருப்பினும், இந்தபோட்டியில் குயின்ஸ்லாந்து அணியை வெற்றி பெற்றது. குயின்ஸ்லாந்து அணி 215 ரன்கள் எடுத்த நிலையில், மேற்கு ஆஸ்திரேலிய அணி 211ரன்கள் மட்டுமே எடுத்தது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close