[X] Close

இந்த வரவேற்பு, உற்சாகம், பிரார்த்தனைகளுக்கு நன்றி: ஹிமா தாஸ் உருக்கம்


i-would-like-to-thank-each-and-everyone

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Sep, 2018 15:43 pm
  • அ+ அ-

உலக ஜூனியர் தடகளப் போட்டியில் தங்கம் வென்று தாயகம் திரும்பியுள்ள ஹிமா தாஸ் ட்விட்டரில் உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டரில், "இந்த நேரத்தில் நான் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனக்கு நீங்கள் நல்கும் இந்த வரவேற்பு. நான் களத்தில் இறந்தபோது நீங்கள் என்னை உற்சாகப்படுத்தியது. எனக்காக நீங்கள் செய்த பிரார்த்தனைகள் என எல்லாவற்றிற்கும் மிகுந்த நன்றி. இதுதான் என்னை நம் தேசத்துக்கு பதக்கத்தை வெல்லச் செய்தது" எனப் பதிவிட்டுள்ளார்.

பின்லாந்தில் நடந்த உலக ஜூனியர் தடகளப் போட்டிகளில் இந்தியாவின் தடகள வீராங்கனை ஹிமா தாஸ் உலக தடகள ஜூனியர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் உலக தடகள ஜூனியர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை ஹிமா தாஸுக்கு கிடைத்தது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமாவின் தந்தை ஒரு விவசாயி ஆவார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close