வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி... இன்று வங்கதேசத்துடன் மோதுகிறது!


உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியும் வங்கதேச அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றது. இதில் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து உலகக் கோப்பை தொடருக்கான அரையிறுதி சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.

அதே போல ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி, தொடக்கத்தில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பின்னர் இந்திய அணியுடனான தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணி தோல்வியில் இருந்து மீள முடியாமல் தடுமாறி வருகின்றது.

மேலும் பாகிஸ்தான் அணி அரையிறுதிப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதில் சந்தேகம் நிலவி வருகின்றது. பாகிஸ்தான் அணி விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

அதே போல மறுபுறம் வங்கதேச அணியும் நடப்பு உலகக் கோப்பை தொடரின் படு மோசமாக விளையாடி வருகின்றது. இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேசம் 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. மேலும் 5 தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் வங்கதேச அணியும் பாகிஸ்தான் அணியும் இன்று நடைபெறும் 41 வது லீக் போட்டியில் விளையாடவுள்ளது. இந்த போட்டி வழக்கம் போல மதியம் இரண்டு மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதுவரை இந்த இரு அணிகளும் 38 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் பாகிஸ்தான் 33 வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசம் 5 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது இன்று(அக்டோபர்31) நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல உலகக்கோப்பையில் இரண்டு அணிகளும் இரண்டு முறை மோதியுள்ளது. இதில் பாகிஸ்தான் அணி ஒருமுறையும் வங்கதேச அணி ஒருமுறையும் மோதியுள்ளது.

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில், இனி வரும் அனைத்து போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டில் பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும். மேலும், தற்போது முதல் 4 இடங்களில் உள்ள அணிகளில் ஏதேனும் ஒன்று சொதப்பும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம். ஒருவேளை இன்று பாகிஸ்தான் தோற்றால், அதன் அரையிறுதி கனவு அவ்வளவுதான்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!

x