அண்டர் 19 உலகக்கோப்பை... இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா!


தென்னாப்பிரிக் பேட்டிங்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணி - இந்தியா வெற்றி பெற 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிகக மோதல்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் சூப்பர் 6 போட்டிகள் நிறைவடைந்து தற்போது அரையிறுதிப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இன்று நடைபெற்று வரும் முதல் அரையிறுதியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி தொடக்கம் முதலே விக்கெட் இழந்து, தடுமாற்றத்துடன் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி

தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்களையும், ரிச்சர்ட் செலட்ஸ்வேன் 64 ரன்களையும் எடுத்து அந்த அணியின் ஸ்கோர் உயரக் காரணமாக இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ராஜ் லிம்பானி 3 விக்கெட்களையும், முஷீர் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

245 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கி விளையாட உள்ளது. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, 6வது சாம்பியன் பட்டத்தை நோக்கி முன்னேறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

x