டிஆர்எஸ் முறையில் தவறு உள்ளது... இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் குற்றச்சாட்டு!


பென் ஸ்டோக்ஸ்

ஸாக் கிரவ்லே ஆட்டமிழந்ததற்கு டிஆர்எஸ் முறையில் உள்ள குறைபாடே காரணம் என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி

இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது. இந்த ஆட்டத்தில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. இந்த ஆட்டத்தில் அபாரமாக பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.

ஸாக் கிராவ்லி

ஆனால், இந்தப் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஸாக் கிராவ்லி எல்.பி.டபிள்யு மூலம் ஆட்டமிழந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 194 ரன் எடுத்திருந்தது. அப்போது களத்தில் கிராவ்லி 73 ரன்களுடனும், பேர்ஸ்டோ 26 ரன்களுடனும் விளையாடி வந்தனர். அப்போது, இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பந்து வீச வந்தார். அவரை எதிர்கொண்ட கிராவ்லி, பந்தை தவற விட அது இடது காலில் பட்டது. குல்தீப் எல்.பி.டபிள்யு முறையில் அவுட் கேட்டார். ஆனால், நடுவர் பந்து இடது பக்கமாக சென்றதாகக் கூறி, நாட் அவுட் எனக் கூறினார். இதையடுத்து, இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா டிஆர்எஸ் மூலம், மூன்றாம் நடுவரை நாடினார்.

ஸாக் க்ராவ்லி, டிஆர் எஸ் முடிவு

அப்போது, டிஆர்எஸ் முறையில் பந்து இடது பக்க ஸ்டம்பில் படுவது போல் காட்டியது. இதனையடுத்து, அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இந்த ஆட்டத்தில் கிராவ்லியின் விக்கெட் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், போட்டி நிறைவடைந்த நிலையில் பேசிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் டிஆர்எஸ் முறையில் உள்ள குறைபாடு காரணமாக கிராவ்லி ஆட்டமிழந்ததாக கூறினார். வெறும் கண்களால் பார்க்கும் போதே பந்து லெக் இடது பக்கமாகச் சென்றது தெளிவாகக் காண முடிந்தது. அதனால் தான் நடுவரும் நாட் அவுட் கொடுத்தார். ஆனால், டிஆர்எஸ் முறையில் உள்ள குறைபாடு காரணமாகப் பந்து லெக் ஸ்டம்பில் பட்டதாக காட்டியதாகவும் கூறினார். அவரது கருத்து டிஆர்எஸ் முறையின் நம்பகத்தன்மை குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

x