இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால்: இந்திய அணி 396 ரன்கள் குவித்து ஆல் அவுட்!


முதல் இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதலாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்து இந்தியாவின் ஜெய்ஸ்வால் சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

இந்த போட்டியில் களமிறங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால், நேற்றைய தினம், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 179 ரன்கள் குவித்திருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் யஸஷ்வி ஜெய்ஸ்வால்

இதனால் இந்திய அணி 6 ரன்கள் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்ட நேரம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜெய்ஸ்வால் தனது முதலாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் முதலாவது இரட்டை சதம் இதுவாகும். இதுவரை ஆறு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 618 ரன்கள் குவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி

இதில் இரண்டு அரை சதங்கள், இரண்டு சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதம் ஆகியவை அடங்கும். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அஸ்வின் 20 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 209 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x