ஆசிய பாரா விளையாட்டில் இரண்டாவது நாளான இன்ற்ய் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை குவித்து வருகின்றனர்
நான்காவது ஆசிய பாரா விளையாட்டுகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கியுள்ளது. வரும் 28ம் தேதி வரையில் 22 விளையாட்டுகளில் 24 பிரிவுகளில் 566 தங்கப் பதக்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதற்காக இந்தியா சார்பில் 196 ஆண்கள் மற்றும் 113 பெண்கள் என 309 தடகள வீரர், விராங்கனைகள் சீனா சென்றுள்ளனர். இவர்கள் 17 பிரிவுகளில் களமிறங்க உள்ளனர். முதல் நாள் முடிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்றது.
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று மகளிர் படகு போட்டி KL2 பிரிவில், இந்திய வீராங்கனை பிராச்சி யாதவ் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பந்தய தூரத்தை 54.962 வினாடிகளில் கடந்து பிராச்சி யாதவ் தங்கம் வென்றார். முன்னதாக, முதல் நாள் நடைபெற்ற மகளிருக்கான VL2 பிரிவின் இறுதிப் போட்டியிலும், பிராச்சி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
400 மீட்டர் டி20 பிரிவில் இந்திய வீராங்கனையான தீப்தி ஜீவான்ஜி, பந்தய தூரத்தை 56.69 விநாடிகளில் எட்டி தங்கப் பதக்கம் வென்றார். 100 மீட்டர் T12 ஓட்டப்பந்தய பிரிவில் இந்திய வீராங்கனையான சிம்ரன், 12.68 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார்.
ஆடவர்களுக்கான படகுப்போட்டியில் கேனோ KL3 பிரிவின் இறுதிப் போட்டியில், இந்திய வீரர் மணீஷ் கவுரவ் பந்தய தூரத்தை 44.605 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். ஆடவருக்கான படகுப் போட்டியில் VL2 பிரிவில், இந்திய விரர் கஜேந்திர சிங் 1:01.084 நேரத்தில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். மகளிருக்கான கிளப்ஸ் த்ரோ போட்டியில் F32/51 பிரிவில், இந்திய வீராங்கனை ஏக்தா பையன், எடையை 21.66 மீட்டர் வீசி வெண்கலம் வென்றார். ஆடவருக்கான 400மீ - T64 ஓட்டப்பந்தய பிரிவில் இந்திய வீரர் அஜய் குமார் பந்தய தூரத்தை 54.85 நொடிகளில் கடந்து, வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதையும் வாசிக்கலாமே...
அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!
அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!