இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி... வலுவான நிலையில் இந்தியா!


ஜடேஜா - அக்ஸார் படேல்

கே.எல்.ராகுல், ஜடேஜா அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.

கே.எல்.ராகுல்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

இந்திய சுழற்பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் 246 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். அஸ்வின், ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ரவீந்திர ஜடேஜா

இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிறகு 119 ரன் எடுத்திருந்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியா அணி சிறிது தடுமாறியது. ஆனால், கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்னை உயர்த்தினர்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன் எடுத்திருந்தது. இந்தியா சார்பில் ஜெய்ஸ்வால் 80 ரன்னும், கே.எல்.ராகுல் 86 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா 81 ரன்னுடன் களத்தில் உள்ளார். அவருடன் அக்ஸார் படேல் 35 ரன்னுடன் களத்தில் உள்ளார். இதன் மூலம் இந்தியா 175 ரன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

x