ஆஸிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்... குட்டிக்கரணம் அடித்த கெவின் சின்க்ளேர்!


குட்டிக்கரணம் அடித்த கெவின் சின்க்ளேர்

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் முதல் விக்கெட் எடுத்ததை குட்டிக்கரணம் அடித்து மேற்கு இந்திய தீவுகள் வீரர் கெவின் சின்க்ளேர் கொண்டாடியுள்ளார்.

ஆஸ்திரேலியா - மேற்கு இந்திய தீவுகள்

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா - மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்கள்

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அந்த அணி அதிரடியாக விளையாடி 311 ரன் குவித்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 289 மட்டும் எடுத்தது. இதில் அஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவஜாவின் விக்கெட்டை, மேற்கு இந்திய தீவுகள் அணியின் அறிமுக வீரர் கெவின் சின்க்ளேர் வீழ்த்தினார்.

குட்டிக்கரணம் அடித்த கெவின் சின்க்ளேர்

இது சர்வதேச டெஸ்ட் போட்டியில் அவரது முதல் விக்கெட். இதனைக் கொண்டாடும் விதமாக அவர் மைதானத்தில் குட்டிக்கரணம் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்பிற்கு 13 ரன் எடுத்திருந்தது. இதன் மூலம் அந்த அணி 35 ரன் முன்னிலை பெற்றுள்ளது.

x