அயர்லாந்திற்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அந்த அணி வெற்றி பெற 302 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்குபெறும் இந்த தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கியது. தற்போது குரூப் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டி ஒன்றில் ‘குரூப் ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
ப்ளூம்ஃபோன்டைன் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து, முஷீர் கான், கேப்டன் உதய் ஷஹாரன் ஆகியோர் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முஷீர் கான் 118 ரன்னும், ஷஹாரன் 75 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 301 ரன் எடுத்தது. அயர்லாந்து அணி சார்பில் ஆலிவர் ரைலே 3 விக்கெட்டும், ஜான் மெக்னாலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 302 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நான் சாகும் வரை முஸ்லிம் தான்... நடிகை குஷ்பு உணர்ச்சிகர பதிவு!