இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அபாரமாக விளையாடி வலுவான நிலையில் உள்ளது
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்க் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அந்த அணிக்காக அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் அதிரடியாக ஆடினர். அதிலும், ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா 24 ரன் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய சுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் வெறும் 47 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் அடித்து வலுவான நிலையில் உள்ளது. ஜெய்ஸ்வால் 76 ரன்னுடனும், கில் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
நான் சாகும் வரை முஸ்லிம் தான்... நடிகை குஷ்பு உணர்ச்சிகர பதிவு!