முதல் டெஸ்ட் போட்டி; இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்... 246 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து!


இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து, களமிறங்கிய அந்த அணி தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சுழலுக்கு சாதகமான ஹைதராபாத் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கை கொடுக்கவில்லை.

இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்

இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் அஸ்வின் களத்திற்கு வந்தார். அவர் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோக் கிராலே, பென் டக்கட் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினர். அவரைத்தொடர்ந்து வந்த ஜடேஜாவும், அக்ஸர் படேலும் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆனால், அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிகபட்சமாக 70 ரன் எடுத்தார். இந்நிலையில், அந்த அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்

இந்தியா சார்பில் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், அக்ஸார் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதேபோல், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் யாஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் ஷர்மா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 10 ஓவர் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 68 ரன் குவித்திருந்தது.

இதையும் வாசிக்கலாமே...

x