வங்கதேசத்திற்கு எதிரான உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
புனேயில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன் எடுத்தது. அந்த அணியின் சார்பில் லிட்டன் தாஸ் 66 ரன்னும், தன்ஜித் ஹாசன் 51 ரன்னும் எடுத்தனர். இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 257 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 41.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன் எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். சுப்மன் கில் 53 ரன்னும், கேப்டன் ரோகித் ஷர்மா 48 ரன்னும் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர். இதன் மூலம் இந்திய அணி தொடர்ந்து 4வது வெற்றியை இந்த தொடரில் பெற்றுள்ளது. மேலும், புள்ளிப் பட்டியலில் 2ம் இடத்தில் நீடித்து வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!
மீண்டும் வெடித்து சிதறிய வால்நட்சத்திரம்... பூமியை நெருங்கும் ஆபத்து!
’லியோ’ விமர்சனம் : இதெல்லாமே பெரிய சறுக்கல்... புலம்பும் ரசிகர்கள்!
வாசகர்களுக்கு ரூ.5,00,000 பரிசு... கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!
அதிர்ச்சி... ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம்! கதறும் நெசவாளர்கள்!