பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது அந்நாட்டை விட்டு வெளியேற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மேட்ஸ்மேனும், கேப்டனுமாக இருந்தவர் சர்பராஸ் அகமது. இவர் அந்த அணிக்காக 54 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரது தலைமையிலான அணி கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தி பட்டம் வென்றது. கடந்த 2021ம் ஆண்டிற்கு பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் உள்ளார். பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தானில் தங்கினால் எதிர்காலம் பறிபோகும் அபாயம் உள்ளதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து சென்று அங்கேயே தங்கி கவுன்டி மற்றும் ஃபிரான்சைஸ் கிரிக்கெட் விளையாட விரும்புவதாகவும் தெரிகிறது. அவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே ஐபிஎல்லில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடமில்லை. பாகிஸ்தான் பிரீமியம் லீக் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் சர்பராஸின் இந்த முடிவு விவாதப் பொருளாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பாஜகவின் இன்னொரு பொய் மூட்டை தான் நிதி ஆயோக்கின் அறிக்கை: காங்கிரஸ் விமர்சனம்!