அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட்: நிதானம் காட்டிய இந்தியா - வங்கதேசத்திற்கு 252 ரன்கள் இலக்கு!


இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட்

இளையோர் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் வங்கதேசம் வெற்றி பெற 252 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது.

சரண், ஆதர்ஷ்

19வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் இந்த தொடரில் விளையாடி வருகின்றன. இதில் லீக் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தொடரின் இரண்டாம் நாளான இன்று 3 போட்டிகள் நடைபெறுகிறது. இதில் ப்ளூம்ஃபோன்டைன் நகரில் நடைபெற்று வரும் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா - வங்கதேசத்துடன் விளையாடி வருகிறது.

இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட்

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்களில் தொடக்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் சிங் 76 ரன்களும் மற்றும் கேப்டன் உதய் சரண் 64 ரன்களும் எடுத்தனர், மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். இதன் மூலம் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் சார்பில் மரூப் மரிதா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாட உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இரும்பே பயன்படுத்தாமல் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில்... கட்டுமானத்தின் வியக்கவைக்கும் சிறப்பம்சங்கள்!

பாஜகவின் இன்னொரு பொய் மூட்டை தான் நிதி ஆயோக்கின் அறிக்கை: காங்கிரஸ் விமர்சனம்!

x