குட்நியூஸ்... விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை... விண்ணப்பிக்க அக்.31 கடைசி தேதி


விளையாட்டு வீரர்கள்

ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்களில் அரசு ஆணைப்படி 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி, 01.01.2018 அன்று அல்லது அதற்குப் பிறகு பின்வரும் போட்டிகளில் உள்ள சாதனைகள் இந்தத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பிற்குத் தகுதியானவராக கருதப்படும். இவர்களுக்கு அரசுத்துறை மற்றும் பொதுத்துறைகளில் 3 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுகள், காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பு (ISF) மூலம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் போட்டிகளில் பதக்கம் அல்லது பங்கேற்றவராக இருக்க வேண்டும்.

காமன்வெல்த் சாம்பியன் ஷிப்களில் பங்கேற்றவர்கள் அல்லது பதக்கம் வென்றவர்கள் பங்கேற்கலாம். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் ஐஓசியால் அங்கீகரிக்கப்பட்ட ISF இன் கீழ் ஆசிய சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது

பாராலிம்பிக் விளையாட்டுகள், ஆசிய பாரா விளையாட்டு, சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் (IBSA) காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள், தேசிய அளவிலான போட்டிகள் (பதக்கம் வென்றவர்கள் மட்டும்), தேசிய விளையாட்டுகள் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றவர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (SDAT) அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்களால் நடத்தப்பட்ட அனைத்து அளவிலான போட்டிகளிலும், மூத்த நிலை போட்டிகள் மட்டுமே பரிசீலனைக்கு தகுதியானவை.

விளையாட்டு வீரர்கள் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து குறைந்தபட்ச கல்வித் தகுதிகளையும் பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். இவர்களது, அதிகபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகள் வரை மட்டுமே.

விளையாட்டு வீராங்கனைகள்

மேற்கண்ட வழிகாட்டுதல்களின்படி, விண்ணப்பதாரர்கள் 3 சதவீத விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் தங்களது விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அல்லது விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் ஆஃப்லைனில் விண்ணப்பித்து, தலைமை அலுவலகம், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், பெரியமேடு, சென்னை-3 என்ற முகவரியில் அக்டோபர் 31, 2023 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

x