[X] Close

அவரைச் சந்தித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.. பிறந்தநாளில் டான் பிராட்மேனை நினைவுகூரும் சச்சின்


remembering-him-fondly-today-sachin-on-bradman

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Aug, 2018 09:19 am
  • அ+ அ-

கிரிக்கெட் உலகு வரலாற்றில் மிக முக்கியமானவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன். இன்று அவரது 110-வது பிறந்தநாளையொட்டி இந்திய கிரிக்கெட் வீரர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை அவரை உணர்வுப்பூர்வமாக நினைவு கூர்ந்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "டான் பிராட்மேனை நான் சந்தித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அந்த நினைவுகள் இன்னும் பசுமையாகவே இருக்கின்றன. அவருடைய அறிவு விசாலம், மதிநுட்பம், அன்பை இப்போது திரும்பிப் பார்க்கிறேன். இன்று அவர் இருந்திருந்தால் 110-வது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார். அவரை இன்று வாஞ்சையுடன் நினைவுகூர்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

என்னையே பார்ப்பது போல் உள்ளது..
சச்சின் டெண்டுல்கர், பிராட்மேனுக்கு பிடித்தமான ஆட்டக்காரராக இருந்தார். தனது கிரிக்கெட் வாழ்வில் டான் பிராட்மேன் 29 சதங்களும், 13 அரைசதங்களும் அடித்துள்ளார். 1998-ம் ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அந்தத் தொடரின் போது டான் பிராட்மன் தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

அப்போது இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே ஆகிய இருவரையும் டான் பிராட்மனின் பிறந்தநாளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அப்போது பேசிய டான் பிராட்மேன், சச்சினின் ஆட்டத்தை பார்க்கும்போது அதில் என்னையே பார்ப்பது போல உள்ளது என்று பாராட்டிப் புகழ்ந்தார். அன்றிலிருந்து சச்சின் இந்தியாவின் பிராட்மேன் என்றும்கூட அழைக்கப்பட்டார்.

டூடுல் வெளியிட்ட கூகுள்!

டான் பிராட்மேன், 1928 ஆம் ஆண்டில் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். 20 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 6,996 ரன்களைக் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி இன்றளவும் பிரமிக்கவைக்கும் வகையில் 99.96 ஆக உள்ளது. 

அத்தகைய பெருமைக்குறிய வீரரின் 110-வது பிறந்தநாளை கவுரவிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close