அர்ஜென்டின வீரரை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார் செர்பியாவின் நோவா ஜோகோவிச்.

உலக அளவில் நடத்தப்படும் டென்னிஸ் தொடர்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது கிராண்ட்ஸ்லாம் போட்டிகள். ஆஸ்திரேலியா ஓபன், விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபன் என ஆண்டுக்கு நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் நடத்தப்படுகிறது. இதில் முதலாவதாக ஒவ்வொரு ஜனவரி மாதமும், ஆஸ்திரேலிய ஓபன் தொடர் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான போட்டிகள் மெல்பர்ன் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 128 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

முதல் இரண்டு சுற்று போட்டிகள் நடந்து முடிவடைந்த நிலையில், இன்று மூன்றாம் சுற்று போட்டிகள் தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரும், செர்பியாவை சேர்ந்தவருமான நோவா ஜோகோவிச் - அர்ஜென்டினாவின் தாமஸ் மார்டின் செவ்ரியுடன் மோதினார். முதல் இரண்டு செட்களை 6-3, 6-3 என எளிதாக வென்ற ஜோகோவிச் 3வது சுற்றை 7-6 என போராடி வென்றார். இதன் மூலம் 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இதையும் வாசிக்கலாமே...
பிரதமர் இன்று தமிழகம் வருகை... ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் நாளை வழிபடுகிறார்!
ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை... பிரதமர் மோடி வருகையால் திடீர் கட்டுப்பாடு!