ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
லக்னோ நகரில் நடைபெறும் 14வது உலகக் கோப்பை லீக் சுற்று போட்டியில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
ஆஸ்திரேலியா ஏற்கேனவே இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுடனான போட்டியில் படுதோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோல், இலங்கை அணியும் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுடனான போட்டியில் தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
இன்றைய போட்டி என்பது கிட்டத்தட்ட இரு அணிகளுக்கும் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில் இன்று தோல்வியடைந்தால், இனி வரும் போட்டிகளில் அந்த அணி கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடம். இதனால், இரு அணிகளுமே இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்குகின்றனர்.