இன்னிங்ஸ் தோல்வி அபாயத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!


ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேற்கிந்திய தீவுகள் அணி போராடி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மேற்கிந்திய தீவுகள் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டி தொடர் நேற்று அடிலெயிட் மைதானத்தில் துவங்கிய நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 188 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்

இதையடுத்து முதல் இன்னிங்ஸை துவக்கிய ஆஸ்திரேலிய அணியில், டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார். 119 ரன்கள் எடுத்து அவர் ஆட்டம் இழந்தார். இதையடுத்து அந்த அணி 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் முதல் இன்னிங்ஸில் கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியது. முதல் இன்னிங்ஸை போலவே இந்த இன்னிங்ஸிலும் ரன்கள் குவிக்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் திணறினர். மெக்கன்சி 26 ரன்களும், கிரீம்ஸ் 24 ரன்களும் எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது. இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களை மட்டும் எடுத்துள்ளது. இதனால் 22 ரன்கள் அந்த அணி பின்தங்கியுள்ளது.

இதன் காரணமாக இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் நிலைக்கு மேற்கிந்திய தீவுகள் அணி உள்ளாகியுள்ளது. வலுவான நிலையில் ஆஸ்திரேலியா அணி இருப்பதால், நாளை போட்டி தொடங்கிய சில மணி நேரங்களிலேயே போட்டி முடிவடைவதற்கான வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x