ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டி... டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு!


இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

சின்னசாமி மைதானம்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

ராகுல் டிராவிட், ரோகித் ஷர்மா

இந்திய அணியில் இருந்து அர்ஷ்தீப் சிங், அக்‌ஷர் படேல் மற்றும் ஜிதேஷ் ஷர்மா ஆகியோர் இந்த போட்டியில் விளையாடவில்லை. அவர்களுக்கு மாற்றாக சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச டி20 போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி

இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. அதேபோல், ஆப்கானிஸ்தான் அணியும் இன்றைய போட்டியில் வெல்வதன் மூலம், உலகக் கோப்பை தொடரில் விளையாட வீரர்களுக்கு ஊக்க அமையும் என்பதால், வெற்றிக்காக அவர்களும் கடுமையாக போராடுவார்கள்.

பெங்களூரு சின்னசாமி மைதானம் சிறியது என்பதால், இன்றைய போட்டியில் பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் பஞ்சமிருக்காது. இதனால், இன்றைய போட்டி விறுவிறுப்புடன் அமையும் என ரசிகர்கள் போட்டியைக் காண ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

x