பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஃபின் ஆலனின் அட்டகாசமான சதத்தால், வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்றுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளை நியூசிலாந்து அணி வென்றிருந்தது. இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி துனெட்டின் நகரில் உள்ள யூனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் 62 பந்துகளில் 5 பௌண்டரிகள், 16 சிக்சர்கள் உட்பட 137 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். டிம் சீபர்ட் 31 ரன்களும், பிலிப்ஸ் 19 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 224 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராஃப் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், பாபர் அசாம் மட்டும் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால், அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 179 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் டிம் செளதி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூஸிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. சதம் அடித்து அசத்திய ஃபின் ஆலன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 4வது டி20 போட்டி வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
புகழ் குன்றா பொன்மனச் செம்மல் |எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் ஸ்பெஷல்!
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புகைப்படங்கள்!
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டர் பக்கம் முடக்கம்!
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
கலித்தொகையில் இருக்கிறது ஜல்லிக்கட்டு... அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்!