ஜெய்ஸ்வால், ஷிவம் துபே பெயர்கள் சேர்ப்பு... பிசிசிஐ-யின் புதிய முடிவு?


ஷிவம் துபே, யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

நடப்பாண்டிற்கான பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் ஜெய்ஸ்வால், துபே ஆகியோர் இணைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஷிவம் துபே, யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கான ஒப்பந்தம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும். இந்த நிலையில், நடப்பாண்டிற்கான ஒப்பந்தம் விரைவில் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஒவ்வொரு வீரர்களும் ஏ பிளஸ், ஏ பிரிவு, பி பிரிவு, சி பிரிவு வீரர்கள் என்று வகைப்படுத்தப்படுவார்கள். இதில், ஏ பிளஸ் வீரர்களுக்கு ஆண்டு ஊதியமாக 7 கோடி ரூபாயும், ஏ பிரிவு வீரர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூபாய் 5 கோடியும், பி பிரிவு வீரர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூபாய் 3 கோடியும், சி பிரிவு வீரர்களுக்கு ரூபாய் 1 கோடியும் ஊதியமாக வழங்கப்படும்.

ஷிவம் துபே, யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்நிலையில், இந்த ஒப்பந்தப்பட்டியலில் இந்த ஆண்டு யாஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் இணைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெய்ஸ்வால் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்க தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஷிவம் துபே இந்திய அணிக்கான டி20 போட்டிகளில் மட்டும் தற்போது விளையாடி வருகிறார். நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால், ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இருவரும் ஆசிய போட்டி தொடரில் தங்கம் வென்ற அணியிலும் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில்தான் பிசிசிஐ மத்திய ஒப்பந்தப்பட்டியலில் இருவரது பெயரும் இணைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

திடீர் திருப்பம்... அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விவேக் ராமசாமி விலகல்: டிரம்பை ஆதரிக்க முடிவு!

x