ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்... 35 ஆண்டுகளுக்குப் பின் சாதித்த இந்திய வீரர் சுமித் நாகல்!


சுமித் நாகல்

ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு இந்தியாவின் சுமித் நாகல் முன்னேறினார்.

சுமித் நாகல்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கியது. இன்று இரண்டாம் நாளாக முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் முதல் முறையாக கலந்துகொண்ட இந்திய வீரர் சுமித் நாகல், தனது முதல் சுற்று போட்டியில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை எதிர்கொண்டார்.

சுமித் நாகல்

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் சுற்றை 6-4 என்ற கணக்கில் நாகல் கைப்பற்றினர். இரண்டாம் செட்டையும் 6-2 என எளிதாக கைப்பற்றி, போட்டியில் முன்னிலை பெற்றார். இதையடுத்து, சுதாரித்த பப்ளிக், நாகலுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார். 3 வது செட்டை கைப்பற்றினால், வெற்றி என்ற நிலையுடன் நாகலும், இந்த செட்டை கைப்பற்றினால், மட்டுமே போட்டியில் தொடர் வாய்ப்பை உருவாக்க முடியும் என்ற நிலையிலும் இருவரும் விளையாடினர்.

சுமித் நாகல்

இதில் 6-6 என இருவரும் இருந்த நிலையில், டை பிரேக்கர் வைக்கப்பட்டது. அதில் 7-5 என்ற கணக்கில் நாகல் பப்ளிக்கை வீழ்த்தினார். இதன் மூலம் 6-4, 6-2, 7-6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

35 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீரர் ஒருவர் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னர் 1989ம் ஆண்டு ரமேஷ் கிருஷ்ணன், ஸ்விட்சர்லாந்தின் மேட்ஸ் விலாண்டரை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

x