25 ஆண்டுகளுக்கு பின் யுவராஜ் சிங் சாதனையை கர்நாடக இளம் வீரர் பிரகார் சதுர்வேதி முறியடித்துள்ளார்.
இந்தியாவில் மாநில அணிகளுக்கு இடையே நடைபெறும் ரஞ்சி கோப்பை தொடரைப்போன்று, 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான கூச் பெஹார் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கூச் பெஹார் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில், மும்பை - கர்நாடக அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி தனது முதல் இன்னிங்சில் 280 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய கர்நாடக அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்குவித்தது. அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 890 ரன் எடுத்து வரலாற்று சாதனை படைத்தது. இதில் அந்த அணியின் பிரகார் சதுர்வேதி 46 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 638 பந்துகளில் 404 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதிலும், அவர் எதிரணி வீரர்களுக்கு தன்னை ஆட்டமிழக்க வைக்க எந்த ஒரு வாய்ப்பும் தராமல், 885 நிமிடங்கள் களத்தில் நின்று ஆடினார். இதன் மூலம், 25 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்தார்.
இதேபோன்ற கூச் பெஹார் கோப்பை தொடரில் விளையாடிய யுவராஜ் சிங் 358 ரன் எடுத்திருந்தார். அதுவே ஒரு இளம் வீரர் இறுதிப் போட்டியில் எடுத்திருந்த அதிக ரன்னாக இருந்தது. அதனை பிரகார் சதுர்வேதி முறியடித்துள்ளார். இதன் மூலம் கர்நாடக அணி முதல் முறையாக கூச் பெஹார் கோப்பையை வென்றது. கூச் பெஹார் தொடரைப் பொறுத்தவரை பிரகார் அதிக ரன் குவித்த இரண்டாவது வீரராக உள்ளார். மகாராஷ்டிர வீரர் விஜய் ஜோல் 2011-12 தொடரில் அசாம் அணிக்கு எதிரான 451 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததே இன்று வரை அதிகபட்ச ரன்னாக உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களமிறங்கிய அமைச்சர்; அதிர்ந்த தொண்டர்கள்
தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
பிக் பாஸ்7 முடிவில் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த சர்ப்ரைஸ்!
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம்!
இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட்... பனிமூட்டத்தால் 17 விமானங்கள் ரத்து!