ரூ.50 லட்சம் பரிசு... பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர்தானா?


அர்ச்சனா

பிக் பாஸ் சீசன் 7-ல் டைட்டில் வின்னராக வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே வந்த போட்டியாளரான அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2-ம் தேதி தொடங்கியது. கூல் சுரேஷ், மாயா, பூர்ணிமா, விஷ்ணு, பவா செல்லத்துரை உள்ளிட்ட 18 பேர் போட்டியாளர்களாக பிக் பாஸ் இல்லத்துக்குள் அனுப்பப்பட்டனர். பின்னர் ஒரு மாதத்திற்கு பிறகு அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ, அன்னபாரதி ஆகியோர் வைல்டு கார்டு என்டரி மூலம் உள்ளே நுழைந்தனர்.

கடந்த சீசன்களை விட இந்த சீசனில் அதிகம் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. குழுக்களாக பிரிந்து போட்டியாளர்கள் மோதிக் கொண்டனர். மாயாவும், பூர்ணிமாவும் காட்டிய அதிக நெருக்கம் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியது. மற்றவர்களை விட விசித்திராவுக்கு ஏற்பட்ட அவமானங்கள் அதிகம். இப்படி ஒவ்வொரு நாளும் சண்டை, பொழுதுபோக்கு என பரபரப்பாக இருந்தது.

அர்ச்சனா

வார இறுதி நாட்களில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்ட நிலையில் 98-வது நாளில், ரூ.16 லட்சத்துடன் பூர்ணிமா வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து 100-வது நாளில் மிட் வீக் எவிக்ஷன் மூலம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். கடைசி வாரத்தில் ஐந்து பேர் ஃபைனல் லிஸ்ட்டாக தேர்வாகினர்.

விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக இருந்தனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இந்த சீசன் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மிக அதிக வாக்குகள் பெற்று அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ரன்னராக மணி தேர்வாகி உள்ளார். மேலும், மாயா மூன்றாவது இடத்திலும், தினேஷ், விஷ்ணு ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

டைட்டில் வின்னரான அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. தமிழ் பிக்பாஸில் இதுவரை வைல்டு கார்டு போட்டியாளராக வந்த யாரும் டைட்டிலை வென்றதே கிடையாது. இந்த சீசனில் முதல் முறையாக வைல்டு கார்டு என்டரியாக வந்த அர்ச்சனா டைட்டில் வின்னராகியிருக்கிறார். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே பெரியளவில் ஆதரவு இருந்து வருகிறது. இந்த நிலையில் தான், தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டில் வென்ற முதல் போட்டியாளராக அர்ச்சனா சாதித்துள்ளார்.

x