ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
உலக அளவில் கண்ட அளவிலான சர்வதேச கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 5வது மிகப்பெரிய கால்பந்து போட்டி தொடராக உள்ளது ஆசியக் கோப்பை கால்பந்து தொடர். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த தொடரில் ஆசிய கண்டத்தில் உள்ள 24 அணிகள் விளையாடுகின்றன. 2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நேற்று கத்தாரில் தொடங்கியது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் லெபனானை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கத்தார் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று 3 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் முதல் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
கால்பந்து போட்டிகளைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணி பலம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. அதேநேரம், சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணியும் சமீப காலங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
தேமுதிகவை வளைத்ததா பாஜக? திமுகவைக் கண்டித்து தேமுதிக திடீர் போராட்டம் அறிவிப்பு!
50 வருஷத்துக்கு சார்ஜர் தேவையில்லை; சந்தைக்கு வருகிறது சீனாவின் லேட்டஸ்ட் பேட்டரி!
30 நிமிடங்களில் வலியில்லாமல் சாகலாம்...வந்தாச்சு 'மிஸ்டர் டெத்' இயந்திரம்!
கத்தியைக் காட்டி திமுக மேயருக்கு கொலைமிரட்டல்... காங்கிரஸ் கவுன்சிலர் தலைமறைவு!
முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு... உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!