ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆப்கானிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகள் போன்ற தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி பஞ்சாபில் உள்ள மொகாலி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஆப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் ரஷீத் கான் முதுகு காயம் காரணமாக, இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்திய அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக இந்த போட்டியில் இருந்து விலகினார்.
இதையடுத்து டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில், ரஹ்மானுல்லா குர்பால் 23 ரன்களிலும், இப்ராஹிம் சத்ரான் 25 ரன்களிலும், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 28 ரன்களிலும் ஆட்டமிழந்து நல்ல துவக்கம் அளித்தனர். இதன் பின்னர் களமிறங்கிய முகம்மது நபி சிறப்பான விளையாடி 42 ரன்கள் அடித்திருந்த போது, முகேஷ்குமார் பந்துவீச்சில், ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 158 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார், அக்சார் பட்டேல் தலா 2 விக்கெட்டுக்களையும், ஷிவம் துபே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். இருப்பினும் சுப்மன் கில் 23 ரன்களும், திலக் வர்மா 26 ரன்களும், ஜிதேஷ் சர்மா 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற ஷிவம் துபே, 40 பந்துகளில் 2 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இறுதியில் இந்திய அணி 17.3 ஓவரில் 4 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுக்களையும், அஸ்மத்துல்லா ஓமர்சாய் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2வது போட்டி குவாலியரில் வருகிற 14ம் தேதி நடைபெற உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் கதறியழுத நடிகை ராதா!
மொத்தமும் போச்சு... ஓ.பீ.எஸ். மேல்முறையீட்டு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு: அதிமுகவினர் குஷி!
பகீர்... நடுரோட்டில் தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு!
லெஸ்பியன் ஜோடிக்கு கோயிலில் நடந்த திருமணம்!
இனி பி.எட் படிப்புகளுக்கு தடை; மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி!