டி20 கிரிக்கெட்... இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்!


இந்தியா - ஆப்கானிஸ்தான்

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு மொஹாலியில் நடைபெறுகிறது.

ரோகித் ஷர்மா - இப்ராகிம் ஜர்தரான்

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இன்று மாலை 7 மணிக்கு தொடரின் முதல் போட்டி மொஹாலியில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி டி20 தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. 2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு ரோகித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் மீண்டும் டி20 போட்டிக்குத் திரும்பியுள்ளனர். மேலும், காயம் காரணமாக டி20 கிரிக்கெட் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால், சூர்யகுமார் யாதவும் அணியில் இடம்பெறவில்லை.

கோலி - ரோகித்

இதன் காரணமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக உள்ள ரோகித் ஷர்மா மீண்டும் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரை 2024-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், அனுபவம் மிக்க ரோகித் மற்றும் கோலி ஆகிய வீரர்கள் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், இந்த வாய்ப்பு இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரோகித் ஷர்மா, ராகுல் டிராவிட், விக்ரம் ரத்தோர்

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அசத்தலாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, இந்த தொடரில் இந்திய அணிக்கு கடும் சவாலாக விளங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரம் இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன.

அதில் இந்தியா 4 முறை வென்றுள்ளது. 1 போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இந்நிலையில், இந்த சரித்திரைத்தை மாற்றி எழுதும் முனைப்புடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் களமிறங்குவார்கள். இதனால், இன்றைய போட்டி விறுவிறுப்புடன் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் நெல்லை வரை பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

‘இந்தியாவின் 4 சங்கராச்சாரியார்களும், ராமர் கோயில் விழாவை புறக்கணித்திருக்கிறார்கள்’

x