ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி பஞ்சாபில் உள்ள மொகாலி மைதானத்தில் நாளை மாலை 7 மணிக்கு துவங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் அறிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இந்திய அணியிலும் முக்கிய வீரர் ஒருவர் விலகியுள்ளார்.

நாளை நடைபெறும் போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. சொந்த காரணங்களுக்காக அவர் இந்த போட்டியில் இருந்து விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விராட் கோலி இந்த தொடரில் 35 ரன்கள் எடுத்தால் வேறு எந்த இந்திய வீரரும் படைக்காத இமாலய சாதனை ஒன்றை படைக்க முடியும்.

இந்தியாவில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் உலக அளவில் 4வது இடத்தில் அவர் இருந்து வருகிறார். இன்னும் 35 ரன்கள் அடித்தால் 12,000 டி20 ரன்களை அவர் குவிக்க முடியும். தற்போது 374 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 11,965 ரன்கள் குவித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களில் கிரிஸ் கெயில் (14,562 ரன்கள்) முதலிடத்திலும், சோயப் மாலிக் (12,993 ரன்கள்) 2ம் இடத்திலும், கெய்ரான் பொல்லார்ட் (12,390 ரன்கள்) 3வது இடத்திலும் உள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள்... 100க்கும் மேற்பட்டோர் கைது!
12 அடி உயரம்... 8 அடி அகலம்... அயோத்தி ராமர் கோயிலில் 42 கதவுகள் தங்கத்தில் பொருத்தம்!
உடனே முந்துங்க... நாளை முதல் நெல்லை வரை பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு... முன்பதிவு துவக்கம்!
மயங்கி விழுந்த பேருந்து ஓட்டுநர்... ஓய்வு பெற்ற ஊழியர்கள் தாக்கியதால் பரபரப்பு!