உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து ருத்ரதாண்டவம்; சரணடைந்த நெதர்லாந்து


நியூசிலாந்து

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியுடன் நெதர்லாந்து மோதியது. டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே -வில் யங் களமிறங்கினர். இருவரும் முதல் 3 ஓவர்களை மெய்டன் செய்தனர். முதலில் தடுமாறினாலும் பின்னர் பவுண்டரிகளை விளாசி தள்ளினர். கான்வே 32 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

நெதர்லாந்து- நியூசிலாந்து

அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா வில் யங் உடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 144 ரன்கள் இருந்த போது இந்த ஜோடி பிரிந்தது. யங் 70 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த மிட்செல் 48, டாம் லாதம் 53 என அதிரடியாக விளையாட கடைசியாக வந்த சாட்னர் 17 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத், பால் வான் மீகெரென், ரோலோஃப் வான் டெர் மெர்வே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

நியூசிலாந்து

பின்னர் விளையாடிய நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் கொலின் அக்கர்மன் அதிகபட்சமாக 69 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

x