வங்தேச நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்ட ஷாகிப் அல் ஹசன் வெற்றி பெற்று எம்.பி ஆனார்.
வங்கதேச நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி தேர்தலைப் புறக்கணித்தது. இந்நிலையில், இந்த தேர்தல் முடிவில் வெளியாகியுள்ளது. அதில் வங்க தேசத்தின் பிரதமரான ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இதன் மூலம் ஹசினா 5வது முறையாக மீண்டும் பிரதமராகியுள்ளார். அவருக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். வங்கதேசத்தின் மேற்கு நகரமான மகுரா தொகுதியில் போட்டியிட்ட ஷாகிப் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் வெற்றிபெறுவதற்காக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு அறிவித்திருந்தார். விரைவில் எம்.பி ஆக பதவியேற்க ஷாகிப் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஷாகிப் ஒரு புதிய சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். தேர்தல் முடிவு வெளியாகும் முன், ஷாகிப் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியே வந்தார். அப்போது அவருக்குப் பின்னால் வந்த ஒரு ரசிகர் அவரை தள்ளியதாகத் தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ஷாகிப் அல் ஹசன், அந்த ரசிகருக்கு ஒரு அறைவிட்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கனமழை எதிரொலி... அண்ணாமலை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!