டி20 மகளிர் கிரிக்கெட்: இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்!


இந்தியா ஆஸ்திரேலியா

இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது

இந்திய அணி பயிற்சியின் போது

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே முடிந்த டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது. ஆனால், ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி அபாரமாக விளையாடி இந்தியாவை வொயிட் வாஷ் செய்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் கடந்த 5-ம் தேதி மும்பையில் தொடங்கியது. முதல் போட்டியில் இந்திய அணி அசத்தலாக விளையாடி, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.

ஸ்மிருதி மந்தனா

இந்நிலையில், டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

அதேபோல், இந்த போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு ஆஸ்திரேலிய அணிக்கு கிடைக்கும். அதனால், அந்த அணியும் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. இதனால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

x