இது நம்ம 'தல' தோனியா?: கோட் சூட்டில் வைரலாகும் புகைப்படம்!


ஸ்டைலாக காட்சி தரும் தோனி.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கோட் சூட்டில் ஸ்டைலாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தோனி, பாடகர் ஸ்டான்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் சென்னை அணியின் கேப்டனாகவும் உள்ளார். இவரை ரசிகர்கள் 'தல' என அன்புடன் அழைத்து வருகின்றனர். சென்னை அணியின் புகழே தோனியால் என்ற அளவுக்கு அவர் மீது ரசிகர்கள் அன்பை பொழிந்து வருகின்றனர்.

அவரது ஒவ்வொரு அசைவும் அதனால் தான் டிரெண்டிங் செய்யப்படுகிறது. இதன் காரணமாக தோனிக்கு ஏகப்பட்ட விளம்பர வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கிறது. சமீபத்தில் அவர் வாட்ச் விளம்பரத்திற்காக எடுத்த போட்டோக்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

தோனி, பாடகர் ஸ்டான்

தனியார் வாட்ச் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்திற்காக, ராப் பாடகர் ஸ்டானுடன் இணைந்து தோனி நடித்துள்ளார். அதில், ஸ்டைலாக கோட், சூட் அணிந்து காணப்படும் அவர், அசத்தலாக பல்வேறு போஸ்களை கொடுத்துள்ளார். அவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், தோனி இந்த கெட்டப்பில் செம ஸ்டைலாக இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம், ராப் பாடகர் ஸ்டான் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருக்கும் நிலையில், அவருடன் தோனி இணைந்து நடிக்கலாமா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x