டி20 உலகக்கோப்பைக்கான அட்டவணை வெளியானதைத் தொடர்ந்து, ஐசிசி வெளியிட்ட போஸ்டரில் இந்திய அணியின் ரோகித் ஷர்மாவின் படம் வெளியானது விவாதங்களை எழுப்பியுள்ளது.
2022ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் தோல்விக்குப் பிறகு கேப்டன் ரோகித் ஷர்மா எந்த ஒரு டி20 போட்டியிலும் ஆடாமல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
ரோகித் ஷர்மா டி-20 போட்டிகளில் விளையாடாத காரணத்தால் அவருக்கு பதிலாக இந்தியா விளையாடிய டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரோகித் ஷர்மா டி20 போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் இந்திய அணியில் எந்த வீரர் கேப்டனாக செயல்படபோகிறார் என்பது அறிவிக்கப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில், ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் டி20 உலகக்கோப்பை தொடரில் தாங்கள் விளையாட தயாராக இருப்பதாக பிசிசிஐயிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. எனவே ரோகித் ஷர்மா ஆடினால், அவர் கேப்டனாக இருப்பாரா அல்லது வேறு யாரேனும் கேப்டன் பொறுப்பை ஏற்பார்களா என்ற கேள்வி எழுந்தது.
அதனை தொடர்ந்து நேற்று டி20 உலகக்கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி அறிவித்து இருந்தது. அப்போது வெளியான போஸ்டரில் உலகக்கோப்பையில் விளையாடும் அணியின் கேப்டன்களின் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தது. அதில் இந்திய அணியின் ரோகித் ஷர்மாவின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. எனவே, இதனை பார்த்த ரசிகர்கள் குழப்பத்துடன் இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையில் ரோகித் ஷர்மாதான் கேப்டனா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஆனாலும் இந்திய அணியின் கேப்டன் யார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், ஐசிசி வெளியிட்டுள்ள போஸ்டரில் ரோகித் ஷர்மாவின் புகைப்படம் இடம்பெற்று இருப்பதால் அவர் டி20 உலககோப்பை போட்டியில் விளையாட நிச்சயம் வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். உண்மையில் யார் இந்திய அணியில் டி20 உலகக்கோப்பை போட்டியில் கேப்டனாக செயல்பட போகிறார் என்பதற்கான விடை விரைவில் கிடைக்கக்கூடும்.
இதையும் வாசிக்கலாமே...
சபரிமலையில் தமிழக பக்தர்கள் மீது கொடூர தாக்குதல்... கேரள போலீஸ் அடாவடி
அதிர்ச்சி... விமான விபத்தில் பிரபல நடிகர், 2 மகள்கள் உயிரிழப்பு
ஜனவரி 21-ல் திமுக இளைஞரணி மாநாடு... திமுக தலைமை அறிவிப்பு!
இன்னும் முடியாத மீட்பு பணி... ஜப்பான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது!
காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு.. 7 பெட்டிகளின் கண்ணாடி உடைப்பு!