அதிரப்போகிறது ஆடுகளம்! உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்; ரசிகர்கள் குஷி


ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

இந்தியா தனியாக நடத்தும் 13-வது உலகக்கோப்பை போட்டி இன்று தொடங்க உள்ளது. நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறும் போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து இன்னும் மீளாததால், டாம் லாதம் இன்று அணியை வழிநடத்துகிறார்.

இங்கிலாந்தை பொறுத்தவரை ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயத்தால் அவதிப்படுவதால் அவர் இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகமே. மற்றபடி, ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோ, ஜோ ரூட், டேவிட் மலான், லிவிங்ஸ்டன் என்று இங்கிலாந்து அணி பலமாக உள்ளது.

இந்த உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதி சுற்றை எட்டுவதற்கு 7 வெற்றி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

x