மகளிர் டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு!


இந்தியா _ ஆஸ்திரேலியா டி20 போட்டி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா_ ஆஸ்திரேலியா டி20 போட்டி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. அதேநேரம், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றது.

இந்திய அணி பயிற்சியின் போது

இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இதன் முதல் போட்டி நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்து வீச செய்ய தீர்மானித்துள்ளது.

தற்போது பனிக் காலம் என்பதால், இரவு நேரம் விக்கெட் வீழ்த்துவது கடினமாக இருக்கும். அதன் காரணமாக இந்தியா பந்து வீச முடிவு செய்துள்ளது. ஒருநாள் தொடரை இழந்த நிலையில், அதற்குப் பதிலடி இந்தியா டி20 தொடரில் பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இதையும் வாசிக்கலாமே...

சனிக்கிழமை `நோ லீவ்’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

x