இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது. ஆனால், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது. தொடரில் வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்தும், மந்தமான பீல்டிங் மற்றும் சொதப்பலான பேட்டிங் காரணமாக தவறவிட்டது இந்திய அணி.
இந்நிலையில், இன்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. இதன் முதல் போட்டி நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில், இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை இரு அணிகளும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இந்தியா 7 முறையும், ஆஸ்திரேலியா அணி 23 முறையும் வென்றுள்ளது. 1 போட்டி சமனில் முடிவடைந்துள்ளது.
இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடியதைப் போல் அல்லாமல், பீல்டிங் மற்றும் பேட்டிங்கில் சிறந்து ஜொலித்தால் இந்த தொடரை கைப்பற்றுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. தொடரை கைப்பற்றி, தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதேநேரம், ஆஸ்திரேலியா பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்குகிறது. அதனால், அந்த அணி தனது வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. இதனால், இந்த டி20 தொடர் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பாக்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
அதிரடி! தமிழகம் முழுவதும் 1847 காவலர்கள் இடமாற்றம்!
முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: ஜன.9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!
மம்தாவிடம் பிச்சை கேட்கவில்லை... காங்கிரஸ் கடும் கோபம்!
ஓடும் காருக்குள்ளேயே நடந்த கல்யாணம்! சினிமாவை விஞ்சிய காதல் ஜோடி